/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை அடிவாரத்தில் போலீசார் அதிரடி சோதனை
/
கொல்லிமலை அடிவாரத்தில் போலீசார் அதிரடி சோதனை
ADDED : அக் 06, 2024 03:23 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி பழனியப்பர் கோவில் அமைந்-துள்ள, கொல்லிமலையின் அடிவாரப் பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சுவது நடைபெறுகிறதா என, சேலம் சரக டி.ஐ.ஜி., உமா, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ் கண்ணா ஆகியோர் ஆய்வு செய்-தனர். மலை அடிவாரத்தில் இருந்து மலைப்பாதையில், மூன்று கி.மீ., தொலைவிற்கு நடந்து சென்று சோதனையிட்டனர்.
தொடர்ந்து, ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில், போலீசார் மற்றும் ஊர் பொதுமக்களுக்கான குற்றத்தடுப்பு கலந்-தாய்வு கூட்டம் நடந்தது. எஸ்.பி., ராஜேஸ்கண்ணா பேசு-கையில், ''போலீஸ் என்றால், 100க்கு போன் செய்வது பொதுவா-னது. இதை தவிர பெண்கள் தொடர்பான புகார்களுக்கு, 181, குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு, 1098 உள்ளன. இவற்-றையும் பொதுமக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்-டனர்.