/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்த ஓட்டுனர்களுக்கு பரிசு வழங்கிய போலீசார்

ADDED : ஆக 01, 2025 01:28 AM
நாமக்கல், நாமக்கல்லில், போக்கு வரத்து விதிகளை முறையாக கடைபிடித்த வானக ஓட்டுனர்களுக்கு, போலீசார் பரிசு வழங்கி பாராட்டினர்.
போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில், எஸ்.ஐ.,க்கள் குணசிங், வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார், நாமக்கல் பயணியர் விடுதி சிக்னல், உழவர் சந்தை, கோட்டை மற்றும் சேலம் பிரிவு சாலை சிக்னல்களில் பணியில் ஈடுபட்டிந்தனர்.
அப்போது, அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள், கார்களில் சீட்பெல்ட் அணிந்து சென்றவர்களை நிறுத்தி, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்ததை பாராட்டும் வகையில், சான்றிதழ் அடங்கிய ஷீல்டு, யோகாசனம் குறித்த புத்தகங்களை வழங்கினர்.
மேலும் ஹெல்மெட் அணியாமல் சென்ற, இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி அறிவுறுத்தினர். மேலும், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சென்ற டிரைவர்களிடம் வேகக்கட்டுப்பாடு, அபராதம் குறித்து எடுத்துரைத்தனர்.