/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடத்தல் காரை கோட்டை விட்ட போலீஸ்காரர், எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
/
கடத்தல் காரை கோட்டை விட்ட போலீஸ்காரர், எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
கடத்தல் காரை கோட்டை விட்ட போலீஸ்காரர், எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
கடத்தல் காரை கோட்டை விட்ட போலீஸ்காரர், எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 14, 2025 02:59 AM
மோகனுார்:மணல் கடத்தலில் ஈடுபட்ட காரை, ஏ.எஸ்.பி., பிடித்த நிலையில், அதை தப்பவிட்ட எஸ்.ஐ., போலீஸ்காரர் இருவரையும், நாமக்கல் எஸ்.பி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்
கரூர் மாவட்டம், வாங்கலில் மணல் கடத்தப்படுவதாக, நாமக்கல் எஸ்.பி., விமலாவிற்கு தகவல் வந்தது.
அவரது உத்தரவுப்ப டி, ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி தலைமையில், கடந்த, 11ம் தேதி அதிகாலை, நாமக்கல் - திருச்சி சாலை, வளையப்பட்டியில், டிப்பர் லாரி, 'மாருதி ஸ்விப்ட்' காரை நிறுத்தி சோதனையிட்டதில், லாரியில் மணல் இருந்தது.
விசாரணையில், கார் மற்றும் டிப்பர் லாரி, கரூர் மாவட்டம், மாயனுாரை சேர்ந்தது என தெரியவந்தது. டிப்பர் லாரி, காரை ஸ்டேஷனுக்கு எடுத்து வரும்படி, மோகனுார் எஸ்.ஐ., சங்கர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டு, ஏ.எஸ்.பி., ஸ்டேஷனுக்கு சென்று காத்திருந்தார். டிப்பர் லாரி மட்டும் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், கார் வரவில்லை.
இதுகுறித்து, எஸ்.ஐ.,யிடம் விசாரித்தபோது, 'ஸ்டார்ட் ஆகாததால் உரிமையாளரை எடுத்து வர சொல்லியுள்ளேன்' என, தெரிவித்தார். ஏ.எஸ்.பி., அதிர்ச்சியாகி, எஸ்.ஐ., சங்கர், போலீஸ்காரர் கோவிந்தராஜூ இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, எஸ்.பி.,க்கு பரிந்துரைத்தார்.
தொடர்ந்து, நேற்று முன்தினம் இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். நேற்று இருவரையும், எஸ்.பி., விமலா, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.