ADDED : ஜூன் 27, 2026 02:30 AM
அ நிறம் | அளவு
திருச்செங்கோடு; திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் குமரன் வெளியிட்ட அறிக்கை:
திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட, 33 வார்டு-களிலும், நாளை, 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அனைத்து நகர ஆரம்ப சுகா-தார நிலையங்கள், நகர்புற நல வாழ்வு மையம், அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட, 34 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் வாய்ப்பை பயன்ப-டுத்திக்கொண்டு, ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்-தாலும், இம்முறையும் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
