/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெங்கரையம்மன் கோவிலில் நாளை மார்கழி மாத படி பூஜை
/
வெங்கரையம்மன் கோவிலில் நாளை மார்கழி மாத படி பூஜை
ADDED : ஜன 04, 2025 01:30 AM
ப.வேலுார், ஜன. 4--
ப.வேலுார் அருகே, வெங்கரையில் பிரசித்தி பெற்ற வெங்கரையம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் படி பூஜை நடப்பது வழக்கம். இதை தொடர்ந்து, நாளை அதிகாலை, 4:00 மணிக்கு பொதுப்பொங்கல் வைத்து சுவாமிகளுக்கு படையல் போடும் நிகழ்ச்சியை தொடர்ந்து, கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து வெங்கரை அம்மன், ரெங்கையன், அல்லாளி, தொட்டியத்தான் சுவாமிகளுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது.
மதியம், 12:00 மணிக்கு அலங்கார பூஜை, மகாதீபாராதனை நடக்கிறது. விழாவில் நாமக்கல், கரூர், சேலம், திருச்சி, ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள்  திரளாக கலந்துகொள்வர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், ஆய்வாளர் ஜனனி, தக்கார் வினோதினி, வெங்கரை காளியம்மன் மூலகுல வேட்டுவ
கவுண்டர்கள் குடிபாட்டு மக்கள் செய்து வருகின்றனர். மார்கழி மாத படி பூஜை விழாவில், டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

