/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோவிலில் பூஜை
/
மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோவிலில் பூஜை
ADDED : பிப் 17, 2025 03:34 AM
நாமக்கல்,: நாமக்கல் - பரமத்தி சாலை, எஸ்.பி., புதுார் செல்வ விநாயகர் கோவிலில், நேற்று தேய்பிறை மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. அதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு விநாயகருக்கு தேங்காய், அருகம் புல், வெள்ளை எருக்கம் பூவால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல், நாமக்கல் - மோகனுார் சாலை, ஐயப்பன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வல்லப விநாயகர், ராஜ ராஜேஸ்வரி கோவிலில், விநாயகருக்கு அபிஷேகம், தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.