/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புரட்டாசி சனிக்கிழமை நைனா மலையில் பூஜை
/
புரட்டாசி சனிக்கிழமை நைனா மலையில் பூஜை
ADDED : செப் 28, 2025 01:57 AM
சேந்தமங்கலம்:புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, நேற்று காலை, சேந்தமங்கலம் அடுத்த நைனா மலை வரதராஜ பெருமாள் கோவில் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நைனா மலை உச்சியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாளுக்கும், பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதேபோல், 3,700 படிகள் ஏறி வரதராஜ பெருமாளை தரிசிக்கவும், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இரண்டாவது வாரமான, நேற்று நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் நைனா மலைக்கு பக்தர்கள் வந்து வண்ணம் இருந்தனர். இதனால் சேந்தமங்கலம் --- புதன் சந்தை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.