/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தபால்துறை சிறப்பு ஏற்பாடு
/
ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தபால்துறை சிறப்பு ஏற்பாடு
ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தபால்துறை சிறப்பு ஏற்பாடு
ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தபால்துறை சிறப்பு ஏற்பாடு
ADDED : நவ 06, 2024 01:33 AM
நாமக்கல், நவ. 6-
'ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, தபால்துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, நாமக்கல் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறையுடன் இணைந்து, இந்தாண்டு நவ., 1 முதல், 30 வரை, நாடு தழுவிய டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பிரசாரத்தை, இந்தியாவில் உள்ள, 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் மேற்கொள்கிறது. சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று, ஆயுள் சான்றை சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் மூலம், ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடி, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் ஆயுள் சான்று (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு சேவை கட்டணமாக, 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும். தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பி.பி.ஓ., நெம்பர், ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க முடியும். தற்போது, முக அடையாளத்தை வைத்து சான்று வழங்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்கள் வீட்டில் இருந்தபடி ஆயுள் சான்றை சமர்ப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

