/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொட்டிரெட்டிபட்டி டாஸ்மாக் கடையால் அவதி
/
பொட்டிரெட்டிபட்டி டாஸ்மாக் கடையால் அவதி
ADDED : டிச 22, 2024 01:21 AM
எருமப்பட்டி, டிச. 22-
எருமப்பட்டி யூனியன் பொட்டிரெட்டிபட்டி வாரச்சந்தை பின்புறத்தில் டாஸ்மாக் மது கடை உள்ளது. இக்கடை அங்குள்ள செங்கல் சூளை பணியாளர்களின் குடியிருப்பின் முன் உள்ளதால், இங்கு குடியிருக்கும் வெளியூர் கூலி தொழிலாளர்கள், இரவு நேரங்களில் துாங்க கூட முடியாத நிலை உள்ளதாக புகார் கூறுகின்றனர். காரணம், குடிமகன்கள் மது குடித்து விட்டு அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவதாகும், ஆபாச வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபடுவதாலும், பெண்கள் தைரியமாக வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த மதுபான கடையின் முன், அதிகாலை முதல், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.