/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் மீது அரசு பஸ் மோதி விசைத்தறி தொழிலாளி பலி
/
டூவீலர் மீது அரசு பஸ் மோதி விசைத்தறி தொழிலாளி பலி
ADDED : மே 25, 2025 12:44 AM
பள்ளிப்பாளையம், மாதேஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் பிரிவு சாலையில், டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் தறித்தொழிலாளி பலியானார்.பள்ளிப்பாளையம் அருகே, மாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 50; விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று மதியம், 2:00 மணிக்கு டூவீலரில் மாதேஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ், ராஜா ஓட்டிவந்த டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜாவை மீட்டு, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.