தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கணும்'

'விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கணும்'

'விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கணும்'


ADDED : ஜூன் 16, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்; 'தொழிலாளர்களுக்கு, 75 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும்' என, விசைத்தறி தொழி-லாளர் சங்கத்தினர், 21வது மகாசபை கூட்டத்தில் வலியுறுத்தினர்.

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க, பள்ளிப்பாளையம் ஒன்றியக்குழுவின், -21வது மகாசபை கூட்டம், நேற்று முன்தினம், காவிரி பகுதியில் உள்ள தொழிற்சங்க அலுவல-கத்தில் நடந்தது. சங்க தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு, 75 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் எனக்கேட்டு, விசைத்தறி உரிமையாளர் சங்கத்-துக்கு கடிதம் அனுப்பி, நான்கு மாதமாகியும் தீர்வு காணவில்லை. இதை கண்டித்து, கையெழுத்து இயக்கமும், அடுத்த மாதம், 14ல் பள்ளிப்பாளை-யத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும். போதிய வருமானமின்றி கடன் நெருக்கடியால், கிட்-னியை விற்று உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழி-லாளர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் உதவித்-தொகை, மருத்துவ உதவி, வீடு வழங்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாத விசைத்-தறி தொழிலாளர்களுக்கு, ஆயக்காட்டூர் பகு-தியில் கட்டப்படும் நகர்ப்புற வாழ்விட மேம்-பாட்டு திட்ட குடியிருப்பில், முன்னுரிமை அடிப்-படையில் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன், ஒன்றியக்குழு செயலாளர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us