/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையத்தில் 1 மணி நேரம் மின்தடை
/
பள்ளிப்பாளையத்தில் 1 மணி நேரம் மின்தடை
ADDED : மார் 24, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று இரவு லேசான காற்றுடன் சாரல் மழை பெய்தது. இந்த சமயத்தில், பெரியகாடு பகுதியில் செல்லும் பிரதான மின் ஒயர் சேதமடைந்தது. இதனால் பெரியகாடு, வசந்த நகர், காவிரி, புதுப்பாளையம், குட்டைமுக்கு உள்ளிட்ட பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து, மின் பணியாளர்கள் விரைந்து சென்று மின் பழுதை சீரமைத்தனர். இதனால், இரவு, 8:00 மணி முதல், 9:00 மணி வரை ஒரு மணி நேரம் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.