ADDED : மே 04, 2026 04:15 AM

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் யூனியன், பருத்திப்பள்ளி பஞ்., வேலணம்பாளையம் நாடார்புரம் பகுதியில்,
20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு பலத்த சூறாவளி
காற்று வீசியது. அந்த சமயத்தில், அப்பகுதியில் இருந்த, இரண்டு மின்
கம்பங்கள் திடீரென அடிப்பாகம் உடைந்து சாய்ந்தன. அப்பகுதி மக்கள்,
மல்லசமுத்திரம் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மின் இணைப்பு
துண்டித்தால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு, மக்கள்
தவிப்புக்குள்ளாகினர்.
தற்போது, கோடை காலம் என்பதால் வெயிலின்
தாக்கம், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மிகாமல் கொளுத்த வருகிறது.
இந்நிலையில் மின்தடையால், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
குடியிருப்பு அருகே மின்கம்பம் விழுந்த சமயத்தில் யாரும் அருகில்
இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
