sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விதிமீறி செயல்பட்ட 4 சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டித்து 'சீல்' வைப்பு

/

விதிமீறி செயல்பட்ட 4 சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டித்து 'சீல்' வைப்பு

விதிமீறி செயல்பட்ட 4 சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டித்து 'சீல்' வைப்பு

விதிமீறி செயல்பட்ட 4 சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டித்து 'சீல்' வைப்பு


ADDED : ஜன 03, 2026 08:03 AM

Google News

ADDED : ஜன 03, 2026 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் விதிமீறி செயல்பட்ட, நான்கு சாய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, குமாரபா-ளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், 'சீல்' வைத்-தனர்.

பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இதில், சில ஆலைகள் விதிமீறி செயல்பட்டு வருகின்றன. சாயக்கழிவு நீரை நேரடியாக வெளி-யேற்றுவதால், ஆற்றில் கலந்து தண்ணீர் மாசடைகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இரவு முழுவதும் ரசாயன நெடியுடன் சாயக்கழிவுநீர், குடியிருப்பு வடிகாலில் பாய்ந்து வரு-கிறது. இதுகுறித்து, கடந்த டிச., 26ல், நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்-றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி தலைமையில் அதிகா-ரிகள், பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளை கண்காணித்து வந்தனர். நேற்று, நேருநகர், அக்ர-ஹாரம் பகுதியில் அனுமதி பெற்று இயங்கி வரும் சாய ஆலைகள், விதிமீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த, மூன்று சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல், ஒட்டமெத்தை பகுதியில் விதி-மீறி செயல்பட்டு வந்த, ஒரு சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us