தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீதம் கூலி உயர்வு கோரி போராட்டம் அறிவிப்பு

விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீதம் கூலி உயர்வு கோரி போராட்டம் அறிவிப்பு

விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீதம் கூலி உயர்வு கோரி போராட்டம் அறிவிப்பு


ADDED : செப் 01, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்; குமாரபாளையம் பகுதி விசைத்தறி தொழிலா-ளர்கள், கடும் விலைவாசி உயர்வு காரணமாக, அதற்கேற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும் எனக்கோரி, தட்டாங்குட்டை ஊராட்சி, வட்ட-மலை எதிர்மேடு பகுதியில், நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்-டுள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்ட விசைத்-தறி தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு., சங்க தலைவர்-களை தொடர்புகொண்டு, கூலி உயர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை உறுதியாக மேற்கொள்ள

உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வட்டமலை வாய்க்கால்கரை அருகில் கூடியிருந்த விசைத்தறி தொழிலாளர்-களை சி.ஐ.டி.யு., சங்க தலைவர்கள் அசோகன், முருகேசன், பாலுசாமி, சக்திவேல் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். ஏற்கனவே, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், 75 சதவீதம் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிலாளர் நல அலுவலருக்கும் கடிதம் அனுப்-பப்பட்டுள்ளது என்ற விபரங்கள் குறித்து, தொழி-லாளர்கள் மத்தியில் பேசப்பட்டது.இதையடுத்து, தொழிற்சங்கம் மற்றும் விசைத்-தறி தொழிலாளர்களின் ஒருமித்த முடிவாக, இன்று வட்டமலை ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்-துவது, புதன்கிழமை காலை, தாசில்தார் அலுவ-லகத்தில் நடைபெறும் காத்திருப்பு போராட்-டத்தில், எதிர்மேட்டில் இருந்து இருசக்கர வாக-னத்தில் ஊர்வலமாக சென்று கலந்துகொள்வது, கூலி உயர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்-யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us