தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 19, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்செங்கோடு,:திருச்செங்கோட்டில், 75 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் மோகன் தலைமை வகித்தார்.

விலைவாசி உயர்வுக்கு தக்கபடி, 75 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பிஎப்., கிராஜுவிட்டி, இ.எஸ்.ஐ., வேண்டும் என்பன உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன் கூறியதாவது: குமாரபாளையம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு பகுதிகளில், 75,000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு, கடந்த, 2023ல் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் முடிந்து, இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், பலமுறை பேச்சுவார்த்தை நடத்த அழைத்தும், விசைத்தறி உரிமையாளர்கள் வரவில்லை.

எனவே, தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, விலைவாசி உயர்வுக்கு தக்கபடி, 75 சதவீத ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us