ADDED : ஆக 20, 2026 05:43 AM
குமாரபாளையம்:குமாரபாளையத்தில்,
20,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இத்தொழிலில், 60,000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள்
ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடுமையான விலைவாசி உயர்வால்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த, 2023ல் போடப்பட்ட
ஒப்பந்தப்படி, ஒப்பந்த காலம் முடிவடைந்தும் கூலி உயர்வு
வழங்கவில்லை. தற்போது, 75 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என,
வலியுறுத்தி, 60க்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்களில்
பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.தொழிலாளர்கள்
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாமக்கல் மாவட்ட விசைத்தறி
தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகம் முன் கண்டன
ஆர்ப்பாட்டம், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாலுசாமி
தலைமையில் நடந்தது. கோரிக்கை மனுவை தாசில்தாரிடம்
வழங்கினர்.
