ADDED : செப் 11, 2026 06:18 AM
பள்ளிப்பாளையம்,:பள்ளிப்பாளையத்தில், கூலி உயர்வு கேட்டு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பள்ளிப்பாளையம்
சுற்றுவட்டார பகுதியில், விசைத்தறி தொழிலில் ஆயிரக்கணக்கானோர்
பணிபுரிகின்றனர். இந்நிலையில், 75 சதவீதம் கூலி உயர்வு உள்ளிட்ட 9
கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்தை நடத்தி, புதிய ஓப்பந்தம் போட
வேண்டும் என, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில்,
பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்கத்திற்கு கடிதம்
கொடுத்து, 9 மாதமாகியும் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
பள்ளிப்பாளையம்
விசைத்தறி சங்க நிர்வாகங்களை கண்டித்தும், உடனே பேசி கூலி உயர்வு
வழங்க வேண்டும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என
வலியுறுத்தி பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று
நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம், ஒன்றிய துணைத் தலைவர் அங்கமுத்து தலைமையில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில்,
மாவட்ட தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் குமார், ஒன்றிய பொருளாளர்
செங்கோட்டையன் ஆகியோர் பேசினர். ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்றனர்.
