ADDED : செப் 12, 2026 07:17 AM
குமாரபாளையம்:குமாரபாளையம்
பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள், 75 சதவீதம் கூலி உயர்வு
கேட்டு, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தாசில்தார், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்
சங்கத்தினர், தொழிலாளர் நல அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்கும் கூலி
உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்தச்சொல்லி, தொழிற்சங்க
கூட்டியக்கம் சார்பில், நேற்று முன்தினம், 20 இடங்களில் தெருமுனை
பிரசாரம் நடந்தது.இதையடுத்து, சேலம் தொழிலாளர் நல அலுவலர்
அலுவலகத்தில், விசைத்தறி தொழிலாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள்
இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
விசைத்தறி
தொழிலாளர்கள் மேற்படி அலுவலகத்தில் நாள் முழுதும் காத்திருந்தும்,
ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் யாரும்
வரவில்லை. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, நேற்று
விசைத்தறி தொழிலாளர்கள் கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்
நடந்தது.
