/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொங்கல் ஆர்டருக்கு காத்திருக்கும் ப.பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்
/
பொங்கல் ஆர்டருக்கு காத்திருக்கும் ப.பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்
பொங்கல் ஆர்டருக்கு காத்திருக்கும் ப.பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்
பொங்கல் ஆர்டருக்கு காத்திருக்கும் ப.பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்
ADDED : நவ 20, 2025 02:37 AM
பள்ளிப்பாளையம், நள்ளிப்பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள், பொங்கலுக்கு ஆர்டர் கிடைக்குமா என, எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு சர்ட், வேட்டி, சேலை, லுங்கி, துண்டு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா
முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. பொங்கல், தீபாவளி, வடமாநில பண்டிகை காலத்தில் விற்பனை அதிகளவு இருக்கும். அந்தளவுக்கு உற்பத்தியும் இரவு, பகலாக நடக்கும்.
சில மாதங்களாக உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன. தீபாவளி சமயத்தில் விற்பனை அதிகரிக்கும், ஆர்டரும் வரும் என, ஜவுளி உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்த ஆர்டர் இல்லை. தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட துணிகள், 40 சதவீதம் விற்பனையின்றி தேக்கமடைந்துவிட்டதால், உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வழக்கமாக, தீபாவளி பண்டிகை முடிந்தவுடன், பொங்கல் பண்டிகைக்கு ஆர்டர் வந்து விடும். தீபாவளிக்கு ஜவுளி விற்பனை தொய்வு நிலையில் காணப்பட்டதால், அடுத்து வரும் பொங்கலுக்கு எதிர்பார்த்தளவு விற்பனை இருக்கும். இதனால், ஆர்டர் கிடைக்கும் என, பள்ளிப்பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

