தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்


ADDED : பிப் 10, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல்: பிளஸ் 2 வகுப்பிற்கான செய்முறை தேர்வு, மாவட்டத்தில், 120 மையங்களில் துவங்கியது. தமிழகத்தில் நடப்பாண்டு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, வரும் மார்ச், 2ல் துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 201 பள்-ளிகளை சேர்ந்த, 9,638 மாணவியர், 9,382 மாணவர் என, மொத்தம், 19,020 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான ஆயத்த பணிகளை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும், விடைத்தாள் தைக்கும் பணி உள்ளிட்ட பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதற்கிடையே, பிளஸ் -2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது. இந்த செய்முறை தேர்வு, வரும், 13 வரை நடக்கிறது. இந்த செய்முறை தேர்வு, நாமக்கல் மாவட்டத்தில், 120 மையங்களில் நடந்-தது. அதில், 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்-கேற்றனர். நேற்று, இயற்பியல், வேதியியல், மின் பொறியியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடத்திற்கான செய்முறை தேர்வு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us