/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பார்த்தீனியம் செடியை உரமாக்க விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
/
பார்த்தீனியம் செடியை உரமாக்க விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
பார்த்தீனியம் செடியை உரமாக்க விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
பார்த்தீனியம் செடியை உரமாக்க விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
ADDED : ஜூன் 01, 2024 06:27 AM
நாமகிரிப்பேட்டை : பார்த்தீனியம் செடியை உரமாக்குதல் குறித்து, விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
தனியார் வேளாண் அறிவியல் கல்லுாரியின் இறுதியாண்டு மாணவர்கள், நாமகிரிப்பேட்டை ஒன்றிய கிராமங்களில் தங்கி செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். இதில், ஆயில்பட்டி கிராமத்தை, தேர்வு செய்தனர். பார்த்தீனியம் மூலம் உரம் தயாரிக்கும் முறை குறித்து மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.இது குறித்து அவர்கள் பேசுகையில், 'பார்த்தீனியம் களை வகையை சேர்ந்தது. இது உரம் தயாரிப்பதில் பயனுள்ள பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மண்ணில் நைட்ரஜன் நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளது. உரம் தயாரிக்கும் இந்த முறையை பயன்படுத்தினால் குறைந்த செலவில் தரமான உரம் கிடைக்கும்.உரம் தயாரிக்க யூரியா அல்லது பாஸ்பேட், மாட்டு சாணம் மற்றும் நெல் வைக்கோல் பயன்படுத்தலாம். 3 முதல், 4 மாதங்கள் வரை முழுமையாக சிதைந்து பின்னர் உரமாக தயாராகிறது. இவ்வாறு மாணவியர் தெரிவித்தனர். 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.