/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் பற்றாக்குறையை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
/
குடிநீர் பற்றாக்குறையை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
குடிநீர் பற்றாக்குறையை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
குடிநீர் பற்றாக்குறையை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : மார் 05, 2025 06:24 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், ''ஒவ்வொரு தேர்தலிலும், தி.மு.க., வெற்றி பெற்று வருகிறது.
அனுபவம் வாய்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்திக்கு, மாவட்ட செயலாளர் பொறுப்பை, முதல்வர் கொடுத்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறை போக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னை குறித்து தகவல் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவியரிடம் கேட்டு பாருங்கள், முதல்வர் தான் அப்பா என்று சொல்வார்கள். இது உணர்வு பூர்வமாக வரக்கூடிய வார்த்தைகள்,'' என்றார்.