/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரும் 12ல் முதுகலை ஆசிரியர் தேர்வு 30 மையங்களில் முன்னேற்பாடு தீவிரம்
/
வரும் 12ல் முதுகலை ஆசிரியர் தேர்வு 30 மையங்களில் முன்னேற்பாடு தீவிரம்
வரும் 12ல் முதுகலை ஆசிரியர் தேர்வு 30 மையங்களில் முன்னேற்பாடு தீவிரம்
வரும் 12ல் முதுகலை ஆசிரியர் தேர்வு 30 மையங்களில் முன்னேற்பாடு தீவிரம்
ADDED : அக் 07, 2025 01:46 AM
நாமக்கல், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், வரும், 12ல், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வு நடக்கிறது. மொத்தம், 30 தேர்வு மையங்களில், 8,193 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 98 மாற்றுத்திறனாளிகள், 15 பார்வைதிறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி தேர்வர்களும், தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நாளான, வரும், 12 காலை, 8:30 முதல், 9:30 மணி வரை மட்டுமே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
தேர்வர்கள், காலை, 9:30 மணிக்கு பின் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதனால், தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். தேர்வர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல் போலீஸ் எஸ்.பி., விமலா, டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.