/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
2 நாள் இ.பி.எஸ்., பிரசாரம் முன்னேற்பாடு பணி தீவிரம்
/
2 நாள் இ.பி.எஸ்., பிரசாரம் முன்னேற்பாடு பணி தீவிரம்
2 நாள் இ.பி.எஸ்., பிரசாரம் முன்னேற்பாடு பணி தீவிரம்
2 நாள் இ.பி.எஸ்., பிரசாரம் முன்னேற்பாடு பணி தீவிரம்
ADDED : அக் 07, 2025 01:45 AM
நாமக்கல், வரும், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில், அக்., 5, 6ல், சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கரூர் மாவட்டத்தில், த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, 'மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது' என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் நடக்க இருந்த இ.பி.எஸ்., பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
மேலும், தனியாருக்கு சொந்த மான பட்டா நிலத்தில் பிரசார கூட்டத்தை நடத்த இடம் தேர்வு செய்யும்படி போலீசார் அறிவுறுத்தினர். அதை தொடர்ந்து, திருச்செங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, கரட்டுப்பாளையம், குமாரபாளையம் தொகுதியில், சாணார்பாளையம், நாமக்கல் தொகுதியில், ஏ.எஸ்.பேட்டை, ப.வேலுார் தொகுதி யில், பாண்டமங்கலம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த பகுதிகளில், அ.தி.மு.க.,வினர், முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சார்பில், நாளை (அக்., 8) மாலை, 5:00 மணிக்கு, திருச்செங்கோடு தொகுதியிலும், 6:30 மணிக்கு, குமாரபாளையம் தொகுதியிலும், நாளை மறுநாள் (அக்., 9) மாலை, 5:00 மணிக்கு, நாமக்கல் தொகுதியிலும், மாலை 6:30 மணிக்கு, ப.வேலுார் தொகுதியிலும், இ.பி.எஸ்., பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை, முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளருமான தங்க மணி நேற்று பார்வையிட்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் கோபிநாத், ராஜா (எ) செல்வகுமார், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளிபாலுசாமி, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.