/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
யோகா மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்
/
யோகா மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : மார் 07, 2024 02:34 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, பள்ளிப்பாளையம் அறிவுத்திருக்கோவில் சார்பில் மனவளக்கலையின் உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் இரண்டு வாரம் முழுமையாக கற்று கொடுக்கப்பட்டது.
யோகா பயிற்சி முடித்த மாணவியருக்கு நேற்று காலை பள்ளிப்பாளையம் அறிவுத்திருக்கோவில் அறக்கட்டளையின் தலைவர் சீனிவாசன் சான்றிதழ் வழங்கி பேசியதாவது: தினசரி உடல் ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்கி, கற்று கொடுக்கப்பட்ட மனவளக்கலையின் பயிற்சி தொடர்ந்து செய்தால், உடல் நலமும், மன நலமும் ஆரோக்கியமாக இருக்கும். படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தலாம். கல்வியில் மேம்பாடு அடையலாம். இவ்வாறு பேசினார்.

