/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
த.வெ.க., தலைவர் விஜய் எழுதிய கடிதம் வழங்கல்
/
த.வெ.க., தலைவர் விஜய் எழுதிய கடிதம் வழங்கல்
ADDED : டிச 31, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: த.வெ.க., தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை, தமிழகம் முழுவதும் மாணவியர், பெண்கள் உள்ளிட்டோரிடம் கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.
அதில், 'கல்வி வளாகம் முதற்கொண்டு மாணவியர், பெண்கள், சிறுமியர் என, அனைவருக்கும் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அண்ணனாக, அரணாக இருந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க தயாராக இருக்கிறேன்' என, எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின் நகலை திருச்செங்கோட்டில் உள்ள மகளிர் கல்வி நிறுவன வளாகம், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் பெண்கள், மாணவியரிடம் வழங்கினர். நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.