தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மரவள்ளி விலை சரிவு

மரவள்ளி விலை சரிவு

மரவள்ளி விலை சரிவு


ADDED : பிப் 09, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம்; சேந்தமங்கலம் வட்டார பகுதியான பேளுக்கு-றிச்சி, கல்குறிச்சி, மேலப்பட்டி, சிங்களாந்தபுரம், திருமலைப்பட்டி, கண்ணுார் பட்டி, மின்னாம்-பள்ளி, கொல்லிமலை வட்டார பகுதிகளில் மர-வள்ளி கிழங்கை விவசாயிகள் அதிகளவில் சாகு-படி செய்துள்ளனர். இங்கு விளையும் மரவள்ளி கிழங்கை, வியாபாரிகள் வாங்கி செல்லப்பம்-பட்டி, ஆத்துார், நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதி-களில் உள்ள சேகோ பேக்டரிகளுக்கு ஜவ்வரிசி தயாரிக்க அனுப்பி வைக்கின்றனர். சேகோ பேக்-டரி உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

கடந்த வாரம், மரவள்ளி கிழங்கு ஒரு டன், 6,000 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, டன்-னுக்கு, 500 ரூபாய் குறைந்து, 5,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிப்ஸ் மர-வள்ளி, 7,500 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாய் குறைந்து, 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்-பட்டது. இதனால், மரவள்ளி விவசாயிகள் கவ-லையடைந்துள்ளனர்.இலவச கண் மருத்துவ முகாம்

ப.வேலுார், பிப். 9

ப.வேலுார் அரிமா சங்க சார்பில், பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் இல-வச கண் சிகிச்சை முகாம், நேற்று நடந்தது. அரிமா சங்க முன்னாள் தலைவர் சுரேஷ், அரிமா சங்க மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் கண்ணன், பொன்னி ராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோ-தனை செய்யப்பட்டது. ப.வேலுார் அரிமா சங்க தலைவர் அருண்குமார், செயலாளர்கள் அரச-குமார், சதீஷ்குமார், பொருளாளர் கிஷோர் கலந்-துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us