/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரத்து குறைவால் குண்டுமல்லி விலை உயர்வு
/
வரத்து குறைவால் குண்டுமல்லி விலை உயர்வு
ADDED : ஏப் 14, 2025 06:49 AM
சேந்தமங்கலம்: வரத்து குறைந்ததால், குண்டுமல்லி விலை ஒரு கிலோ, ௬௦௦ ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
எருமப்பட்டி யூனியனில், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், நவலடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. தினமும் அதிகாலை பூக்களை பறித்து, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் தினசரி மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால், பூக்கள் வரத்து குறைந்தது. இதனால், ஒருகிலோ குண்டுமல்லி, 250 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, வரத்து குறைவால், 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஊசி மல்லி கிலோ, 600க்கு விற்பனை செய்யப்பட்டது.

