/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஏப் 19, 2025 01:56 AM
மல்லசமுத்திரம்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், மல்லசமுத்திரம் வட்டார கல்வி அலுவலகம் முன், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் மாலை, ஒன்றிய தலைவர் தேவராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், பணிநிறைவு ஆசிரியர்களுக்கு, உரியகாலத்தில் ஓய்வூதியம் மற்றும் அதன்பலன்கள் வழங்க வேண்டும். தவறான தணிக்கை தடையால், அரசு கணக்கிற்கு நிதிசெலுத்தியுள்ள பணிநிறைவு ஆசிரியர் மற்றும் ஓய்வூதிய வாரிசுதாரர்களுக்கு, தணிக்கைத்தடை நிவர்த்தியின் பயன்கள், பலன்கள் பெற்று தரப்படுதல் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து, ஆசிரியர் மன்றத்தின் வட்டார கல்வி அலுவலர்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினர். வட்டார கல்வி அலுவலர்கள் சரியான பதிலை தராததால், ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டமாக மாறியது.
பின், மாவட்ட தொடக்கப்பள்ளி முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர், தொலைபேசியில், பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு, 9:00 மணிக்கு, இரண்டு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, வட்டார கல்வி அலுவலர்கள் கடிதம் வழங்கினர். பின், காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

