/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு
/
சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு
சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு
சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு
ADDED : ஆக 17, 2025 02:16 AM
ராசிபுரம், பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ராசிபுரம் ஒன்றிய செயலாளர் லட்சுமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சங்கர் செயலறிக்கை வாசித்து தீர்மான விளக்க உரை ஆற்றினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாரதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவாஜாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம், மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை நிராகரித்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம், தமிழகத்தின் இடைநிலை தொடக்கநிலை ஆசிரியருக்கு வழங்க வேண்டும். அண்ணாதுரை முதல்வராக இருந்த காலம் முதல், பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தொடர்ந்து வழங்க வேண்டும். ஒன்றிய மற்றும் நகராட்சி பணிமூப்பை பறித்து, மாநில பணி மூப்பை திணிக்கும் அரசாணை எண, 243ஐ ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய மற்றும் நகராட்சி பணி மூப்பின் படி பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
டிட்டோ ஜாக்கின், பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும், 22ல் சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.