ADDED : ஜூலை 03, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்:குமாரபாளையம்
காவேரி நகரில் வசிப்பவர் மதிவாணன், 41. இவர் பல வழக்குகளில் கைது
செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் இவர், ஜாமினில் வெளியே வந்தார். நீதிபதி
உத்தரவின்படி, 30 நாட்களுக்கு குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில்
கையொப்பம் இட வேண்டும். ஆனால் இவர், 15 நாட்களுக்கு மட்டும் கையொப்பம்
இட்ட பின், தலைமறைவானார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
