/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 04, 2025 01:21 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில், நாளை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (5) மல்லசமுத்திரம் அருகே உள்ள மகேந்திரா தனியார் தொழில்நுட்பக் கல்லுாரியில் காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை நடக்க உள்ளது.
நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்று வட்டார பகுதியில் உள்ள, 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. மேலும், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு நடைபெறுகிறது. 8 முதல் டிகிரி வரையிலும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பொறியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பயின்றோர் கலந்து கொள்ளலாம். இதில் கலந்துகொள்ள, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம், தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.