/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரியங்கா வெற்றி காங்., கொண்டாட்டம்
/
பிரியங்கா வெற்றி காங்., கொண்டாட்டம்
ADDED : நவ 25, 2024 03:17 AM
ராசிபுரம்,: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், வடுகம் முனியப்பம்பாளையம் கிராம காங்., கமிட்டி சார்பில், நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாமகிரிப்பேட்டை வட்டார துணைத்த-லைவர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு முன், வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் காங்., கொடி ஏற்றினார். முன்னாள் பிரதமர் ராஜிவ் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், மேற்கு மாவட்ட பொறுப்பாளார் பொன்னையன், வட்டார தலைவர்கள் ஷேக் உசேன், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.