/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கல்

ADDED : ஜன 09, 2024 11:12 AM
நாமக்கல்: கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு, நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் பரிசு வழங்கினார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்டம், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம், சேடப்பட்டி தி.மு.க., இளைஞரணி சார்பில், பொம்மைக்குட்டைமேட்டில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டிகளில், பல்வேறு பகுதிகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. 'நாக்-அவுட்' முறையில் நடந்த இப்போட்டியில், செல்லப்பம்பட்டி அணி முதல் பரிசை வென்றது. சேடப்பட்டி அணி, இரண்டாம் பரிசும், நல்லிபாளையம் அணி, மூன்றாம் பரிசும், வெண்ணந்துார் அணி, நான்காம் பரிசும் வென்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, புதுச்சத்திரம் ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். தாளம்பாடி பஞ்., தலைவர் சதீஷ்குமார், சுற்றுச் சூழல் அணி மாவட்ட துணைத்
தலைவர் ராஜன், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.