/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செஸ் போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
செஸ் போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜூலை 13, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனியில், எஸ்.பி.பி., கிளப்ஸ் சார்பில் ஆண்டு தோறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு போட்டி, கடந்த, 10, 11ல் நடந்தது.
இதில், 23 பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, 490 மாணவர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு நேற்று நடந்தது. தனியார் காகித ஆலை இயக்குனர் சீனிவாசன், பொது மேலாளர் அழகர்சாமி ஆகியோர், பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவியரை பாராட்டினர். ஏற்பாடுகளை எஸ்.பி.பி., கிளப் நிர்வாகிகள் ராஜாசுந்தரம், சிவக்குமார் மற்றும் கிளப் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

