ADDED : செப் 23, 2026 07:16 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம்
டவுன் பஞ்.,ல், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 17.40 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு, எம்பி மாதேஸ்வரன் அடிக்கல்
நாட்டினார். டவுன் பஞ்., தலைவர் சித்ரா தனபாலன் தலைமை வகித்தார். ஒன்றிய
செயலாளர் அசோக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
எம்.பி., மாதேஸ்வரன் கலந்துகொண்டு, சேந்தமங்கலம் --
ராசிபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள மஜீத்தில், 10.40 லட்சம் ரூபாய்
மதிப்பில் மயான சுற்றுச்சுவர் அமைக்கவும், காந்திபுரம், 5வது வார்டில்,
6.40 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கவும் அடிக்கல்
நாட்டினார்.
