/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நகர்மன்ற கூட்டம் நடக்காததால் திட்டப்பணி முடங்கும் அபாயம்
/
நகர்மன்ற கூட்டம் நடக்காததால் திட்டப்பணி முடங்கும் அபாயம்
நகர்மன்ற கூட்டம் நடக்காததால் திட்டப்பணி முடங்கும் அபாயம்
நகர்மன்ற கூட்டம் நடக்காததால் திட்டப்பணி முடங்கும் அபாயம்
ADDED : செப் 04, 2025 02:15 AM
பள்ளிப்பாளையம், நகர்மன்ற கூட்டம், இரண்டு மாதமாக நடக்காததால், நகராட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் நகராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த செல்வராஜ் தலைவராகவும், பாலமுருகன் துணை தலைவராகவும் உள்ளனர். கடந்த ஜூலை, 25ல் நடந்த நகர்மன்ற கூட்டத்தில், தலைவர், துணை தலைவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து துணை தலைவர் பாலமுருகன், கூட்டத்திலிருந்து வெளியே சென்று விட்டார். துணை தலைவர் வெளியே சென்றதால், தி.மு.க.,-அ.தி.மு.க.,-ம.தி.மு.க., கவுன்சிலர்களும் வெளியேறிவிட்டனர்.இதையடுத்து, மன்ற அரங்கில், தி.மு.க.,வை சேர்ந்த, மூன்று கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தனர். இதனால் அன்றைய தினம் நகர்மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, 28 காலை, 11:00 மணிக்கு நகர்மன்ற கூட்டம் துவங்கியது. தலைவர், கமிஷனர், அதிகாரிகள் கூட்டத்திற்கு வந்தனர். கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள், 3 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். துணை தலைவர் உள்பட, 17 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
இதையடுத்து, நகர்மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தலைவர் செல்வராஜ் அறிவித்துவிட்டு சென்று விட்டார். கடந்த, இரண்டு மாதமாக நகர்மன்ற கூட்டம் நடக்காததால், திட்டப்பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.