/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1.2 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்
/
ரூ.1.2 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : ஜூன் 22, 2025 12:55 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட ஆவாரங்காடு பகுதியில், 1.2 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் துவக்க விழா, நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
ஈரோடு எம்.பி., பிரகாஷ், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர், நமக்கு நாமே திட்டத்தில், 10.50 லட்சம் ரூபாய் மதிப்பில் யோகா மையம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 92 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி என, மொத்தம், 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். பள்ளிப்பாளையம் நகர தி.மு.க., செயலாளர் குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.