/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'அறிவுசார் மைய நுாலகத்தை முறையாக பராமரிக்கணும்'
/
'அறிவுசார் மைய நுாலகத்தை முறையாக பராமரிக்கணும்'
ADDED : நவ 10, 2024 01:29 AM
'அறிவுசார் மைய நுாலகத்தை
முறையாக பராமரிக்கணும்'
நாமக்கல், நவ. 10-
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட கணேசபுரம், மோகனுார் சாலை நகர்ப்புற நலவாழ்வு மைய வளாகத்தில், சித்த மருத்துவமனை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பணிகளை, கலெக்டர் உமா பார்வையிட்டார். அப்போது, நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, சிகிச்சை பெறுவதற்காக வந்த நோயாளிகளுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, மோக னுார் டவுன் பஞ்.,ல் உள்ள நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தை ஆய்வு செய்தார். அப்போது, நுாலகத்தை தொடர்ந்து பயன்படுத் தும் வகையில் முறையாக பராமரிக்க வேண்டும். வாசகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என, டவுன் பஞ்., அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாநகராட்சி செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொ) ராஜேஸ்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலசுப்ரமணியன், தாசில்தார் மணிகண்டன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.