/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெயிலால் காய்ந்து வரும் மரங்களுக்கு லாரி மூலம் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு
/
வெயிலால் காய்ந்து வரும் மரங்களுக்கு லாரி மூலம் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு
வெயிலால் காய்ந்து வரும் மரங்களுக்கு லாரி மூலம் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு
வெயிலால் காய்ந்து வரும் மரங்களுக்கு லாரி மூலம் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு
ADDED : மே 03, 2024 07:26 AM
பள்ளிப்பாளையம் : சவுதாபுரம் பஞ்., சார்பில் நடப்பட்ட, ஆயிரத்திற்கு மேற்பட்ட மரம், செடிகள் வெப்பத்தின் தாக்கத்தால் காய்ந்து வருகிறது. இவைகளை காப்பாற்ற லாரி மூலம் தண்ணீர் ஊற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் பஞ்., பகுதியில், அடர்ந்த காடு வளர்ப்பு திட்டத்தில் அரசு புறம் போக்கு இடம், குடியிருப்பு, சாலைப்பகுதியில் வேப்பம் மரம், புங்கம் மரம், நாவல் மரம், பாதனி மரம், எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு, மாம்பழம், மற்றும் காய்கறிகள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள், செடிகள் பஞ்., சார்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது.
இந்த மரங்களுக்கு பஞ்., சார்பில் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்யப்பட்டு வந்தது. செடி, மரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த இரண்டு வாரமாக வழக்கத்திற்கு மாறாக அளவுக்கு அதிகமான வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் தண்ணீர் பற்றாக்குறை, வெப்பத்தின் தாக்கத்தால் வைக்கப்பட்ட மரம், செடிகள் காய்ந்த நிலைக்கு சென்று விட்டது. மரம், செடிகளை காப்பாற்ற பஞ்., சார்பிலும், மற்றும் சிலர் உதவியுடன் கடந்த, 10 நாட்களாக லாரிகள் மூலம் மரம், செடிக்கு தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது.