/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாலியல் தொல்லை வாலிபருக்கு 'காப்பு'
/
பாலியல் தொல்லை வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 15, 2025 01:48 AM
ராசிபுரம், ராசிபுரம், பட்டணம் சாலையை சேர்ந்தவர் ஆனந்த் மனைவி அனுப்பிரியா, 30; திருமணமானவர். நேற்று மாலை அனுப்பிரியா வீட்டில் தனியாக இருந்தபோது, 21 வயது மதிக்கதக்க வாலிபர் கதவை தட்டி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அனுப்பிரியா தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து தந்தபோது, வாலிபர் அனுப்பிரியாவை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார்.
இதனால், அனுப்பிரியா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வந்தனர். இதை பார்த்து ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், சேலம் சின்ன வீராணத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகன் கவுதம், 21, என்பது தெரியவந்தது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து கவுதமை கைது செய்தனர்.