/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கள்ளக்காதலனை வெட்டிய கள்ளக்காதலிக்கு 'காப்பு'
/
கள்ளக்காதலனை வெட்டிய கள்ளக்காதலிக்கு 'காப்பு'
ADDED : செப் 07, 2024 07:52 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, கள்ளக்காதலனை வெட்டிய கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை, கப்பலுாத்து பகுதியை சேர்ந்தவர் அரப்பளி மகன் முருகேசன், 40; கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மற்றொரு முருகேசன் மனைவி அமுதா, 37. இந்நிலையில், முருகேசனுக்கும், அமுதாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ஆனால், சில மாதங்களாக அமுதா, முருகேசனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். நேற்று காலை, கார்
கூடல்பட்டி அருகே, விவசாய நிலத்தில் பூ பறிக்க சென்ற அமுதாவிடம், முருகேசன் தவறாக நடக்க முயன்றுள்ளார். சில்மிஷம் செய்ய முயன்ற முருகேசனை, அமுதா அருகில் கிடந்த கொடுவாளால் கழுத்து, தோள்பட்டையில் வெட்டியுள்ளார்.
இதில் காயமடைந்த முருகேசனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகார்படி, ஆயில்பட்டி போலீசார் அமுதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.