/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னெச்சரிக்கையாக வாலிபருக்கு 'காப்பு'
/
முன்னெச்சரிக்கையாக வாலிபருக்கு 'காப்பு'
ADDED : டிச 31, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காடச்சநல்லுாரை சேர்ந்தவர் மணிகண்டன், 21; இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள், பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளன. மணிகண்டன், தொடர்ந்து அப்பகுதி யில் அடாவடி, மிரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து பொதுமக்களிடம் இருந்து போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
மேலும், அப்பகுதியில் விரைவில் உள்ளூர் கோவில் திருவிழாவும் வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மணிகண்டனை, பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.