ADDED : செப் 29, 2026 05:55 AM
நாமக்கல்; தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், தேனி, சேலம், திண்டுக்கல், தஞ்சையில், நில அளவை பணியின் போது, நில அளவை-யர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், தாக்கு-தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரியும், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இளங்-கோவன் தலைமை வகித்தார். கோட்ட துணைத்-தலைவர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் சுபாஷ் வெங்கடேசன் முன்-னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், நில அளவையர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பணியின்-போது தாக்குதலுக்கு உள்ளாகும் நில அளவையர்-களுக்கு, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், தாக்குதலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கோட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் அருண், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
