மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 13, 2024 01:24 AM
பள்ளிப்பாளையம், டிச. 13-
விதிமுறை மீறி செயல்படும், சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காத மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்டித்து, பள்ளிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பள்ளிப்பாளையம், குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏாரளமான சாய ஆலைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் தண்ணீரால், காவிரி ஆற்று தண்ணீர் மாசடைகிறது. மேலும் நிலத்தடி நீரும், விவசாயமும் பாதிக்கப்படுகிறது. சாயக்கழிவு நீரால் மாசடைந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு, கேன்சர், அலர்ஜி உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது.
விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது, நடவடிக்கை எடுக்காத மாசு கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் கண்டு கொள்ளாத தமிழக அரசை கண்டித்தும், ம.தி.மு.க., சாமானிய மக்கள் கட்சி, மக்கள் உரிமை கூட்டணி ஆகியவற்றின் சார்பில், நேற்று பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகர ம.தி.மு.க., செயலர் ரமேஷ், மக்கள் உரிமை கூட்டணி மாநில பொருளாளர் முனுசாமி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
