ADDED : ஜூலை 09, 2026 04:38 AM

பள்ளிப்பாளையம்:ஆனங்கூர்
பஞ்., பகுதியில் நல்லாகவுண்டம்பாளையம், பகத்சிங் ஆகிய இடங்களில்
தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
ஆனங்கூர் பஞ்., பகுதியில் நல்லாகவுண்டம்பாளையம், பகத்சிங் ஆகிய
பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக இல்லாமல் உள்ளதால், மக்கள்
அவதிப்படுகின்றனர். இந்நிலையில், குடிநீரை முறையாக வழங்காததை
கண்டித்தும், அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில், உயரமான
இடத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும் என்ற
கோரிக்கை களை வலியுறுத்தி, நேற்று முன்தினம், ஆனங்கூர் பஞ்சாயத்து
அலுவலகம் முன், மா. கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கிளை செயலாளர்
ஜெகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து,
திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் தெரிவிக்கும் இடத்தில்
மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்படும் என, அதிகாரிகள்
தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மா. கம்யூனிஸ்டு நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
