/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையில் டூவீலர்களை நிறுத்தி தர்ணா போராட்டம்
/
சாலையில் டூவீலர்களை நிறுத்தி தர்ணா போராட்டம்
ADDED : செப் 21, 2025 12:57 AM
ப.வேலுார் :சாக்கடை வசதி இல்லாததால், தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து, 11 வது வார்டுக்கு உட்பட்ட கடைத்தெரு பகுதியில், சாக்கடை வசதி இல்லாததால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
மேலும் மழை காலங்களில் அப்பகுதி குடியிருப்புக்குள் சாக்கடை நீர் புகுந்து, வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தது. இதனால் சாக்கடை வசதி வேண்டி, பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் புதியதாக இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் போது சாக்கடை வசதி செய்து தரப்படும் என, டவுன் பஞ்., நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் சாக்கடை வசதி அமைத்து தராமல், தார்ச்சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. தகவலறிந்த அப்பகுதி மக்கள், சாலை அமைக்கும் பணிக்கு வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். சாலை போட்ட பின், சாக்கடை வசதி செய்த தரப்படும் என டவுன் பஞ்.,நிர்வாகத்தினர் கூறியதை, பொதுமக்கள் ஏற்க மறுத்தனர்.மேலும் மேற்கொண்டு பணிகள் நடக்காமல் சாலையில், தங்களது டூவீலர்களை நிறுத்தி கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.