ADDED : ஏப் 18, 2026 05:24 AM
ஓமலுார்; கல்குவாரி வாகனங்கள் வேகமாக செல்வதால் சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
காடையாம்பட்டி, உம்பிளிக்கம்பட்டியில் இயங்கும் கல்குவாரிகளில் இருந்து வரும் வாக-னங்கள், இரவில் அதிவேகமாக சென்று வருகின்-றன. இதனால் மக்கள், அச்சத்துடன் சென்று வரும் அவலம் தொடர்கிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறையினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று காலை, 9:00 மணிக்கு அந்த வழியே வந்த குவாரி வாக-னங்களை தடுத்து நிறுத்தி, சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.தீவட்டிப்பட்டி போலீசார் பேச்சு நடத்தியும் பல-னில்லை. பின் அங்கு வந்த பி.டி.ஓ., பானுமதி, 'தேர்தல் முடிந்த பின் உரிய நடவடிக்கை எடுக்-கப்படும்' என கூறினார். இதனால், 4 மணி நேர போராட்டத்துக்கு பின், வாகனங்களை எடுத்துச்-செல்ல, மக்கள் அனுமதித்தனர்.
