அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் ரத்து
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் ரத்து
ADDED : ஜூன் 03, 2026 03:39 AM
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் யூனியன், மாணிக்கம்பாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த, 30ல் எலச்சிபாளையத்தை சேர்ந்த சிறுவன் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அவர் தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்ததால், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததாக கூறி, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், வேலகவுண்டம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், பரமத்திவேலுார் டி.எஸ்.பி., தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் விமலா, வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரன், முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. சம்பந்தப்பட்ட டாக்டரை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 'சிறுவன் வாந்தி எடுத்ததற்கான காரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்' என, உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மருத்துவமனையில் உரியமுறையில் சிகிச்சை அளிக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர்.இதில், மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், சி.பி.எம்., ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், தேவராஜன், தமிழ்புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
